டிச.6 தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2500 போலீசார்

1 month ago 7

மதுரை, டிச. 7: டிச.6 தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர், புறநகரில் 2500 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.  நாடு முழுவதும் டிச.6 தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி மதுரை மாநகரின் 100 வார்டு பகுதிகளுக்கு மதுரை கமிஷனர் லோகநாதன் உத்தரவின் பேரிலும், புறநகரான திருமங்கலம், சோழவந்தான், வாடிப்பட்டி, மேலூர், பேரையூர் உள்ளிட்ட பகுதிகளில் எஸ்.பி அரவிந்த் உத்தரவின் பேரிலும் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முக்கியமாக மக்கள் கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அசம்பாவிதங்கள் எதும் நிகழாத வகையில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் உள்ளிட்டவை மோப்பநாய் உதவியுடன் பரிசோதனை செய்யப்பட்டது.

The post டிச.6 தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் appeared first on Dinakaran.

Read Entire Article