டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு: ஜூன் 15-ல் முதல்நிலைத் தேர்வு

3 days ago 4

சென்னை: டிஎன்பிஎஸ்சி வருடந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு இன்று (ஏப்.1) வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

Read Entire Article