விருதுநகர், ஏப்.12: விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், டிஎன்பிஎஸ்சி மற்றும் காவல் ஆய்வாளர் சார்புத் தேர்வுகளுக்கான ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-1 மற்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய காவல் ஆய்வாளர் சார்பு தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்காக ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
இக்கருத்தரங்கம், அரசுப் பணிகளில் உள்ள அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்வில், காவல் ஆய்வாளர் சார்பு தேர்வுகளுக்கு காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களுக்கு மதியம் 1.30 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெற்றது. இதில்தேர்வுகள் குறித்த விளக்கங்கள், தெளிவுரை வழங்கப்பட்டது.
கருத்தரங்கில், தமிழ்நாடு சீருடைப்பணியாளர்கள் தேர்வாணையத்தின் காவல் ஆய்வாளர் சார்பு தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 75 தேர்வர்களும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 78 தேர்வர்களும் கலந்து கொண்டனர்.
The post டிஎன்பிஎஸ்சி, காவல் ஆய்வாளர் சார்புத் தேர்வுகளுக்கான கருத்தரங்கம் appeared first on Dinakaran.