டி20 கிரிக்கெட்: வித்தியாசமான உலக சாதனை படைத்த புவனேஸ்வர் குமார்

1 month ago 6

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளும், பதிரனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 197 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

காயம் காரணமாக முதல் போட்டியில் களமிறங்காத புவனேஸ்வர் குமார் இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு திரும்பினார். இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இவர் கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியில் விளையாடினார். அதன் பிறகு புனே வாரியர்ஸ் இந்தியா மற்றும் ஐதராபாத் அணிகளில் விளையாடினார். இந்த சீசனில் மீண்டும் பெங்களூரு அணிக்கு திரும்பியுள்ளார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி தரப்பில் ஒரு போட்டிக்கும் மற்றொரு போட்டிக்கும் இடையே அதிக ஆட்டங்களை (238 ஆட்டங்கள்) தவறவிட்ட வீரர் என்ற வித்தியாசமான உலக சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. புவனேஸ்வர் குமார் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 238 ஆட்டங்கள்

2. கரண் சர்மா - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 225 ஆட்டங்கள்

3. மந்தீப் சிங் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 206 ஆட்டங்கள்

4. பென்னி ஹோவெல் - ஹாம்ப்ஷயர் - 164 ஆட்டங்கள்

5. ஷிகர் தவான் - டெல்லி கேப்பிடல்ஸ் - 155 ஆட்டங்கள்


Read Entire Article