டி20 கிரிக்கெட்: மாபெரும் சாதனை படைத்த ரோகித் சர்மா

10 hours ago 1

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ரிக்கெல்டன் 61 ரன்களும், ரோகித் 53 ரன்களும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 48 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 218 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் மும்பை 100 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 30 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட், கரண் ஷர்மா தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா எடுத்த ரன்களையும் சேர்த்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதுவரை 6,019 ரன்கள் அடித்துள்ளார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணிக்காக அதிக ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி, பெங்களூரு அணிக்காக 8,871 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:

1. விராட் கோலி - 8,871 ரன்கள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

2. ரோகித் சர்மா - 6,019 ரன்கள் -மும்பை இந்தியன்ஸ்

3. ஜேம்ஸ் வின்ஸ் - 5,934 ரன்கள் - ஹாம்ப்ஷயர்

4. சுரேஷ் ரெய்னா - 5,528 ரன்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ்

5. மகேந்திரசிங் தோனி - 5,269 ரன்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ்

Read Entire Article