டி20 கிரிக்கெட்; ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு...ஆப்கானிஸ்தான் 144 ரன்கள் சேர்ப்பு

1 month ago 6

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் செடிகுல்லா அடல் ஆகியோர் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் ரன் எடுக்காமலும், செடிகுல்லா அடல் 3 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் 20 ரன், முகமது இஷாக் 1 ரன், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 13 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து கரீம் ஜனத் மற்றும் முகமது நபி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் கரீம் ஜனத் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கரீம் ஜனத் 54 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் ங்வாரா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே ஆடி வருகிறது.

Read Entire Article