
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 112 ரன்கள் அடித்தார். இதனையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்கி உள்ளது.
இந்த ஆட்டத்தில் கே.எல். ராகுல் அடித்த சதம் டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த 7-வது சதமாக பதிவானது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த 3-வது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. விராட் கோலி - 9 சதங்கள்
2. ரோகித் சர்மா - 8 சதங்கள்
3. அபிஷேக் சர்மா/கே.எல்.ராகுல் - 7 சதங்கள்