டி.வி.எஸ். ஐ-கியூப் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு ரூ.30 ஆயிரம் வரை தள்ளுபடி

3 months ago 22

இந்திய மக்கள் தற்போது மின்சார வாகனம்(எலெக்ட்ரிக்கல் வாகனம்) ஓட்டுவதையே சிறந்த தேர்வாக பார்க்கிறார்கள். மெல்ல, மெல்ல மின்சார வாகன பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக மின்சார ஸ்கூட்டரை கூறலாம். 'டி.வி.எஸ்.' ஒரு பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் என்பதை அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனம் தனக்கென நிலையான வாடிக்கையாளர்களை ஈர்த்து வருவது மட்டுமல்லாமல், அவர்களின் நம்பிக்கையையும் தனது தொழில்நுட்பம், புதுமைகள் மூலம் திருப்திப்படுத்தி வருகிறது. இதில் டி.வி.எஸ். ஐ-கியூப் என்பது ஒரு நம்பகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமல்லாமல் ஒரு குடும்பத்துக்கான வாகனமாக பிரபலம் அடைந்திருக்கிறது. டி.வி.எஸ். ஐ-கியூப் ஸ்கூட்டரை தேர்வு செய்த 3.50 லட்சத்துக்கும் மேலான வாடிகையாளர்கள் திருப்தி அடைந்து இருக்கிறார்கள். நீங்களும் இந்த அற்புதமான ஸ்கூட்டரை வாங்க விரும்பினால் அதற்கு இதுதான் சரியான நேரம் ஆகும். ஏனெனில் பண்டிகை கால சலுகையாக ரூ.30 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்பட உள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டர் 5 விதமான டிசைன்களில் வருகிறது. 10 வண்ணங்களிலும், ஏராளமான சிறப்பு வசதிகளுடனும் நீங்கள் விரும்பும் வகையில் டி.வி.எஸ். ஐ-கியூப் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.

ஏராளமான எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள வாகனம் ஓட்டும் சூழ்நிலையை கருத்தில் கொண்டே வாகனங்களை தயாரிக்கிறார்கள். அதன்மூலம் அவர்கள் தங்கள் நோக்கத்தை அடைந்துவிட்டதாக எண்ணுகிறார்கள். அதனால் தான் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வாகனங்கள், குறைந்த அளவிலான 'பிரேக்' மற்றும் வேகத்திறன், 65 கிலோ எடை வரை மட்டுமே சுமக்கும் திறன் அளவுக்கு வாகனங்களை தயாரிக்கிறார்கள். ஆனால் பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் தினமும் இந்த வாகனங்களை வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டுவது என்பது மிகவும் கடினம்.




 


ஆனால் டி.வி.எஸ். ஐ-கியூப் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நகரில் உள்ள போக்குவரத்து சூழ்நிலை, சாலையின் தரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இந்த ஸ்கூட்டர் ஓடும். மேலும் கூடுதல் நபரையும் ஏற்றிக்கொள்ள முடியும். நிகழ்கால உலகின் சூழ்நிலைக்கு ஏற்றதாக டி.வி.எஸ். ஐ-கியூப் ஸ்கூட்டர் இருக்கும்.

டி.வி.எஸ். ஐ-கியூப் ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அது பூர்த்தி செய்யும். மிகைப்படுத்தி இருக்காமல் நடைமுறையில் உள்ளதை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துக்காட்டும்.

இருப்பினும் ஏன் டி.வி.எஸ். ஐ-கியூப்பை இப்போது வாங்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்.

பண்டிகை கால பொருட்கள் வாங்க இதுதான் சரியான நேரம். மிக அதிக அளவிலான தள்ளுபடிகள் ஏராளமான பொருட்களுக்கு வழங்கப்படும். அதன்மூலம் பொருட்களை வாங்க விரும்பும் மக்களுக்கு இது வாய்ப்பாக இருக்கும். அதுபோல் டி.வி.எஸ். ஐ-கியூப் ஸ்கூட்டரை கவர்ச்சிகரமான சலுகையில் வாங்க சிறந்த நேரம் இதுதான். இதன் தொடக்க விலை ரூ.89,999. இந்த ஸ்கூட்டரை இப்போது வாங்கினால் ரூ.30 ஆயிரம் வரை விலையில் உடனடி சலுகை வழங்கப்படும். மேலும் குறைந்த அளவில் முன்பணம் செலுத்தி, அதாவது ரூ.7,999 மாதம் ரூ.2,399 தவணை முறையிலும் வாங்க சலுகை உள்ளது. இது குறைந்தகால சலுகை ஆகும். இந்த மாதம்(அக்டோபர்) மட்டுமே அமலில் இருக்கும்.

இதில் உள்ள புதிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:-

*முன்பக்க சக்கரத்துக்கு டிஸ்க் பிரேக்.

*பின்புறமாக ஓட்டி வாகனத்தை நிறுத்த அறிவுறுத்தும் வசதி.

*சுற்றுச்சூழல் பாதுகாப்பாகவும், அதிவேகமாகவும் செல்லும் வசதி.

*குறுஞ்செய்தி மற்றும் செல்போன் அழைப்புகளை உணர்த்தும் வசதி.

*பெரிய இருக்கை, அதிக இடவசதி, ஆனந்தமான பயணத்துக்கு உறுதுணை.

டி.வி.எஸ். ஐ-கியூப் எப்போது உங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களில் தோன்றிய வண்ணங்களிலும் தயாரித்து வழங்கப்படுகிறது. இருக்கைக்கு அடியில் 32 லிட்டர் இடவசதியும், முன்பகுதியில் பைகள், பெட்டிகளை வைக்கும் அளவுக்கு தாராளமான இடவசதியும் உள்ளது. டி.வி.எஸ். ஐ-கியூப் ஸ்கூட்டரில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகம் வரை செல்ல முடியும். வேகமாக சார்ஜ் ஆகும் திறன், 2.45 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யக்கூடிய திறன் உள்ளது. நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்ஜிங் மையங்கள் இருப்பதால் வாகனத்தை சார்ஜ் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலை வேண்டாம். நீங்கள் எந்த நகரத்தில் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். மேலும் நாடு முழுவதும் 950-க்கும் மேற்பட்ட டீலர்கள் இருப்பதால் அங்கும் சென்று எந்த நேரத்திலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

உங்கள் வாகனத்தில் ஏதாவது பிரச்சினை இருப்பதை அறிந்தால் நீங்கள் அழைத்திடும் தூரத்திலேயே பழுது நீக்கி கொடுக்கும் வசதிகள் உள்ளது. டி.வி.எஸ். ஐ-கியூப் ஸ்கூட்டரை வாங்குவதன் மூலம் ஒரு கிலோ மீட்டருக்கு 30 பைசாவை நீங்கள் சேமிக்கலாம். அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.37,500 சேமித்திட முடியும். இது உங்களுடைய தேவைகளுக்கு உதவும்.

அதனால் இப்போதே, இன்றே டி.வி.எஸ். ஐ-கியூப் ஸ்கூட்டரை ரூ.5,000 கொடுத்து முன்பதிவு செய்து அற்புதமான சலுகை மூலம் வாகனத்தை ஓட்டிச்செல்லுங்கள்.

Read Entire Article