டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி அணிக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை பாந்தர்ஸ்

1 week ago 3

நெல்லை,

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 23-வது போட்டி திருநெல்வேலியில் நடக்கிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரில் திருச்சி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராம் அரவிந்த் 14 ரன்களும், அனிருத் சீதாராம் 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய அதீக் அர் ரகுமான் 30 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சரத்குமார்(37 ரன்கள்) மற்றும் குர்ஜப்நீத் சிங்(17 ரன்கள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 132 ரன்கள் என்ற இலக்குடன் திருச்சி அணி விளையாடி வருகிறது. 

Read Entire Article