டாஸ்மாக்கில் மும்மொழியில் அறிவிப்பு பலகை? - தமிழக அரசு விளக்கம்

3 hours ago 3

சென்னை,

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த சூழலில் டாஸ்மாக் மதுபான கடைக்கான அறிவிப்பு பலகை மும்மொழியில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதில் 'ஒருவழியாக தமிழகம் மும்மொழி கொள்கையை டாஸ்மாக்கில் அறிமுகம் செய்துள்ளதாக' கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இது பழைய புகைப்படம் மற்றும் அகற்றப்பட்டது. நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஆண்டு புதிதாக மதுக்கூடம் (பார்) ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் அந்த பலகை 'பார்' உரிமதாரரால் வைக்கப்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் நடவடிக்கை மேற்கொண்டு பலகை அகற்றப்பட்டது. தற்போது எந்த 'போர்டும்' அந்த இடத்தில் இல்லை. பழைய புகைப்படம் தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article