சென்னை: டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் தரப்பில் 3 மனுக்கள் தக்கல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையில் கைபற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக அறிக்கையையும் அமலாக்கத்துறை வெளியிட்டது.
The post டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை கோரி வழக்கு appeared first on Dinakaran.