
புதுடெல்லி,
டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வேறு மாநில ஐகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை வரும் திங்கள்கிழமை பட்டியலிட நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.