“டாஸ்மாக் முறைகேட்டில் பல விஐபிக்களுக்கு தொடர்பு” - ஹெச்.ராஜா

5 hours ago 5

மதுரை: “டாஸ்மாக் முறைகேட்டில் விஐபிக்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது. இது அமலாக்கத்துறை விசாரணை முடிவில் வெளிச்சத்துக்கு வரும்” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.

மதுரையில் ஜூன் 22ம் தேதி நடைபெற இருக்கும் முருகன் மாநாட்டுப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியானதில் இருந்து திமுக அரசு பதற்றத்தில் உள்ளது. ரித்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

Read Entire Article