
புதுடெல்லி,
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஐகோர்ட்டு விசாரித்து வருகிறது.
இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் மிஷா ரோத்தகி, டாஸ்மாக் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியம் மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.