ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் 'மிஷன்: இம்பாசிபிள்' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். அதில் டாம் குரூஸ் நடிப்பு மற்றும் ஸ்டண்ட் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம்.
சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996-ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாசிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன.
அதனை தொடர்ந்து, 'மிஷன்: இம்பாசிபிள்' படத்தின் 8 பாகம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு "மிஷன்: இம்பாசிபிள் - தி பைனல் ரெக்கனிங்" என்று பெரியடப்பட்டுள்ளது. டாம் குரூஸ் மீண்டும் ஈதன் ஹன்ட் வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இப்படம் வருகிற மே மாதம் 23-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் 62 வயதான டாம் குரூஸ் தலைகீழாக பறக்கும் விமானத்தில் தொங்கும்படி இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அதில் டாம் குரூஸ், டூப் எதுவும் போடாமல் தனே அந்தரத்தில் தொங்கும் படி நடித்து காட்டியுள்ளார். இந்த ஸ்டண்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை டாம் குரூஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.