டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நெக்சான் சிஎன்ஜி டார்க் எடிஷனை சந்தைப்படுத்தியுள்ளது. இந்த காப்பாக்ட் எஸ்யுவி, கிரியேட்டிவ் பிளஸ் எஸ், கிரியேட்டிவ் பிளஸ் பிஎஸ், பியர்லெஸ் பிளஸ் பிஎஸ் என 3 வேரியண்ட்களில் வருகிறது. பெயருக்கு ஏற்ப கிரில், அலாய் வீல்கள், ஸ்கிட் பிளேட் உட்பட முழுமையான கருப்பு வண்ணத்தில் வெளிவந்துள்ளது. உட்புறமும் கருப்பு தீமுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். உட்புறம் இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொண்ட டூயல் 10.25 அங்குல டிஸ்பிளே, பனோரமிக் சன்ரூப், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.12.7 லட்சம். டாப் வேரியண்ட் சுமார் ரூ.14.7 லட்சம்.
The post டாடா நெக்சான் சிஎன்ஜி டார்க் appeared first on Dinakaran.