டாடா அல்ட்ராஸ்

3 weeks ago 5

டாடா நிறுவனம் அல்ட்ராஸ் பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 88 எச்பி பவரை வெளிப்படுத்தும். 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வேரியண்டும் உள்ளது. மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட இது 90 எச்பி பவரை வெளிப்படுத்தும். இதுபோல் 1.2 லிட்டர் சிஎன்ஜி மேனுவல் இன்ஜின் உள்ளது. புதிய அல்ட்ராஸ் பேஸ்லிப்டில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்சிலும் கிடைக்கிறது. ஆனால், டர்போ பெட்ரோல் இன்ஜின் இல்லை.

இந்த காரில் 10.25 அங்குல முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், நேவிகேஷன் உள்ளது. 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் ஆடியோ சிஸ்டம், புதிய எல்இடி ஹெட்லைட் மற்றும் டிஆர்எல்கள், புதிய கிரில் மற்றும் பம்பர்கள், 16 அங்குல டூயல் டோன் அலாய் வீல்கள், டி வடிவ டெயில் லாம்ப்கள் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.6.89 லட்சம். ஜூன் 2ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம்.

The post டாடா அல்ட்ராஸ் appeared first on Dinakaran.

Read Entire Article