ஒரே நாளில் இந்தியப் பெண்கள் மற்றும் ஆண்கள் கிரிக்கெட் அணி இரண்டு பெரும் வெற்றியைக் கொடுத்து கடந்த வாரம் முழுக்க வைரல் ஹிட்டாகியிருக்கிறார்கள். மலேசியா கோலாலம்பூரில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தகுதி பெற்றன. பிப்ரவரி 3ஆம் தேதி இறுதிப்போட்டி மலேசியா கோலாலம்பூர் மைதானத்தில் இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீராங்கனை கோங்காடி திரிஷா 33 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 44 ரன்கள், ஷனிகா 22 பந்தில் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார்கள். இந்திய அணி வெறும் 11.2 ஓவரில் இலக்கை எட்டி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டி20 உலகக்கோப்பை தொடரை வென்று சாம்பியன் ஆகி அசத்தியது.மேலும் U-19 உலகக் கோப்பையையும் வென்று திரும்பியுள்ளது. இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆண்கள் கிரிக்கெட் அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இவ்விரண்டு வெற்றிகளும் ஒரே வாரத்தில் நிகழ இரு அணிகளுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்துவருகின்றன. மேலும் வெற்றி பெற்ற வீரர்களின் கொண்டாட்டம், அவர்களின் நாடு திரும்பிய புகைப்படங்களுமான இணையம் கொண்டாடிவருகிறது.
The post டபுள் வெற்றி! appeared first on Dinakaran.