சென்னை,
டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
*கனிம சுரங்க விவகாரத்தில் ஏல நடைமுறை திட்டம் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என கடிதத்தில் குறிப்பிட்டேன். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அக்டோபரிலேயே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினேன் .
*அரிட்டாப்பட்டி உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரிய தளம் என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.*அமைச்சகத்தால் ஏலம் மட்டுமே விட முடியும், குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
*மாநில அரசின் ஆட்சேபனையை மீறி மத்திய அரசு ஏலம் மேற்கொண்ட விவகாரத்தை முதல்-அமைச்சர் பிரதமரிடம் கொண்டு சென்றார்.
பிரதமரிடம் விவகாரம் கொண்டு செல்லப்பட்டதால் அரிட்டாப்பட்டியில் சுரங்கம் அமைக்கும் முடிவை அமைச்சகம் மறுஆய்வு செய்ய முடிவு. மறுஆய்வு செய்ய முடிவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.ஆயிரக்கணக்கான மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கிய சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.