சரத் குமார் நடித்த 'தி ஸ்மைல் மேன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

11 hours ago 1

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள்' ஆகிய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன. இவர் கடந்த மாதம் வெளியான 'ஹிட் லிஸ்ட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.இவரது 150-வது படமான 'தி ஸ்மைல் மேன்' இயக்குனர் ஷ்யாம் பர்வின் இயக்கியுள்ளார்.

சரத்குமார் இப்படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அவரது ஞாபகம் அழிவதற்குள் அவர் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும். இதை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 24ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

Read Entire Article