மேலூர்: டங்ஸ்டன் சுரங்க திட்டம் ஒருபோதும் வராது என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டி மக்களை, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்றிரவு சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது: அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் ஒரு போதும் வராது.
வருகிற 17, 18, 19 ஆகிய தேதிகளில் ஒன்றிய கனிம வளத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி சென்னை வருகிறார். இந்த போராட்டக்குழு நிர்வாகிகளை அவரை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன். இத்திட்டம் வராது என்பதை அவர் மூலமாகவே தெரிவிக்க வைக்கிறேன். இந்த தேதியில் ஒன்றிய அமைச்சர் வராவிட்டால், வரும் 20ம் தேதி போராட்ட குழுவின் பிரதிநிதிகளுடன் டெல்லி சென்று நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார்.
The post டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் வராது: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.