ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மின்சார ரெயில்கள் இயக்கம்

2 months ago 13

சென்னை,

தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, இன்று (வியாழக்கிழமை) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (31-ந்தேதி) பொதுவிடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும். சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்டிரல் - கும்மிடிப்பூண்டி, சென்டிரல் - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article