சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியின் தோழியும் ஞானசேகரனால் பாதிக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரித்துவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஞானசேகரன் கைதாக காரணமாக இருந்த மாணவி திங்கட்கிழமையன்று விடுதி அறையில் அழுது கொண்டே நிகழ்ந்த சம்பவம் குறித்து தெரிவித்தபோது கடந்த சனிக்கிழமை தானும் பாதிக்கப்பட்டதாக அவரது தோழி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த பிறகு அவர்களின் ஆண் நண்பர்களின் ஐ.டி கார்டை ஞானசேகரன் செல்போனில் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.