
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் உள்ள டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு டிப்ளமோ படித்தார். தொடர்ந்து லண்டனில் திரைக்கதை எழுதுவது தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பை முடித்தார். சில குறும்படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது லைகா தயாரிப்பில் புதிய படம் ஒன்றை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார். இதில், நடிகராக சந்தீப் கிஷன் நடிக்கிறார். எஸ்.தமன் இசையை மேற்கொள்கிறார். கடந்த பல மாதங்களாக இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தநிலையில், படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. மேலும், முதற்கட்டமாக சந்தீப் கிஷன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுவதாக கூறப்பட்டது.
ஆனால் திரைப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து வேற எந்த ஒரு தகவலும் வெளிவராததால், லைகா நிறுவனம் இப்படத்தை கைவிட்டதாக செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு இலங்கை செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
