ஜேஇஇ பயிற்சி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

1 month ago 12

கோட்டா: உத்தரப்பிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் உஜ்ஜாவல் மிஸ்ரா. இவர் ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து ஜேஇஇ பயிற்சி மையத்தில் நுழைவு தேர்வுக்கு படித்து வந்தார். நாளை ஜேஇஇ மெயின் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக இவருக்கு லக்னோவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இவரை அழைத்துச்செல்வதற்காக வேளாண் விஞ்ஞானியான இவரது தந்தை தீபக் குமார் நேற்று கோட்டா வர இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை விடுதியில் இருந்து வெளியேறிய உஜ்ஜாவல் அங்குள்ள ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். ரயில் வரும் நேரத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரது விடுதி அறையில் இருந்து எந்த தற்கொலை கடிதமும் கிடைக்கவில்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் கோட்டாவில் பயிற்சி மாணவர் தற்கொலை செய்துகொள்வது இது பத்தாவது சம்பவமாகும்.

The post ஜேஇஇ பயிற்சி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article