
சென்னை ,
பாஜக தேசிய தலைவர் ஜே .பி. நட்டா, வரும் மே 3ம் தேதி சென்னை வருகிறார். சென்னைக்கு வரும் அவர் மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். மேலும் தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி வியூகம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவா், கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.
ஜே .பி நட்டாவின் வருகையை முன்னிட்டு பாஜகவின் முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தி உள்ளது.