பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கம்

4 hours ago 3

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் சில யூ டியூப் சேனல்கள் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத கருத்துக்களையும், தவறான தகவல்களையும் வெளியிட்டு வருவதாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த சேனல்களை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணித்தது. அப்போது அந்த சேனல்களில் மத்திய அரசுக்கு எதிரான உள்ளடக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் டான் நியூஸ், இர்ஷாத் பட்டி, சமா டி.வி., ஆரி, ராப்டர், தி பாகிஸ்தான் ரெபரன்ஸ், ஜி.என்.என்., உமர் சீமா, உள்ளிட்ட 16 பிரபல யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியது.

இந்தநிலையில், பாகிஸ்தானுக்காக 500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடிய அப்ரிடி, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு போதுமான அளவு விழிப்புடன் இருக்கவில்லை என்று இந்திய ராணுவத்தை குற்றம் சாட்டி இருந்தார். இந்திய ராணுவத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததற்காக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடியின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக தவறான தகவலை பரப்பி வரும் பாக். யூடியூப் சேனல்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Read Entire Article