தா.பழூர். ஏப். 2: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தா.பழூர் கிளை மாநாடு தா.பழூரில் நடைபெற்றது. பரமசிவம் தலைமை வகித்தார். சக்கரவர்த்தி, ராதாகிருஷ்ணன், தியாகராஜன், தனசிங், அஞ்சலாமேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தா.பழூரில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி துவங்க வேண்டும். பேருந்து பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்க வேண்டும். மெயின் ரோட்டில் இருந்து தாதம்பேட்டை செல்லும் குண்டும் குழியுமான சாலையை உடனடியாக புதுப்பித்து தரமான சாலையாக அமைத்து தர வேண்டும். ஜெயங்கொண்டம் தா.பழூர், குறிச்சி, சோழமாதேவி, கோடாலி கருப்பூர் வழியாக அணைக்கரைக்கு புதிய நகரப் பேருந்து இயக்க வேண்டும். ஏழு ஆண்டுகளாக இடிந்து விடும் நிலையில் உள்ள தெற்கு தாதம்பட்டை மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அப்புறப்படுத்தி புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். தா.பழூர் நகரம் முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் சீனிவாசபுரம் செல்லும் சாலை இரண்டு பக்கமும் கொட்டப்படுகிறது இதனால் தொற்று நோய் ஏற்படுகிறது வேறு இடத்தில் குப்பைகளை கொட்ட நடவடிக்கை வேண்டும். சீனிவாசபுரம் இடுகாட்டில் குடிநீர் வசதியுடன் இறுதி சடங்கு செய்ய மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் தனசிங் நன்றி கூறினார்.
The post ஜெயங்கொண்டம் தா.பழூர் வழியாக அணைக்கரைக்கு புதிய நகர பேருந்து இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை appeared first on Dinakaran.