சென்னை: ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரம் மருத்துவ சேவையாற்ற வேண்டும் என சிபிஎம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜெயங்கொண்டம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற 13-வது ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன், ரத்த பரிசோதனை உயர் சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்க வேண்டும் எனவும், அனைத்து ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
The post ஜெயங்கொண்டத்தில் 24 மணி நேரம் மருத்துவ சேவை: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தீர்மானம் appeared first on Dinakaran.