"ஜென்ம நட்சத்திரம்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

4 hours ago 3

சென்னை,

கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 'ஒரு நொடி' எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தமன்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், தீபா சங்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிரைம் திரில்லர் ஜானரில் மணிவர்மன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் மணிவர்மன் – தமன்குமார் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு 'ஜென்ம நட்சத்திரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் தமன்குமாருக்கு ஜோடியாக மால்வி மல்கோத்ரா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து காளி வெங்கட், முனீஷ்காந்த், தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தை அமோகம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஹாரர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் 'ஜென்ம நட்சத்திரம்' படம் வரும் 18ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

The devil's mark awakens…#JenmaNatchathiram rises in theatres this July 18Are you ready to face the 666?#JenmaNatchathiramFromJuly18@tamanaakshanofficial @amoham_studios @whitelamppictures_official @romeopicturesoffl @b.manivarman @sureshchandraaoffl @malvimalhotrapic.twitter.com/6RmvqRA6tS

— Amoham Studios (@amohamstudio) July 5, 2025
Read Entire Article