ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்

1 month ago 5

டெல்லி: மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அரசியல் சட்டத்தின் 67(பி)ன் படி நம்பிக்கை இல்லாத தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டது. 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மாநிலங்களவையில் 82 பேர் உள்ளனர். ஜெகதீப் தன்கரை போல் பாரபட்சமாக நடந்து கொள்ளும் மாநிலங்களவை தலைவரை நான் இதுவரை பார்த்ததில்லை என திக்விஜய் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிக்காத தன்கர் ஆளுங்கட்சி உறுப்பினர்களை பேச அனுமதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

The post ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article