ஜூனியர் பிரிவு இறுதிப்போட்டிகள்: பெர்னெட், வகானா சாம்பியன்

2 weeks ago 2


ஜூனியர் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நேற்று சுவிட்சர்லாந்து வீரர் ஹென்றி பெர்னெட்- அமெரிக்காவின் பெஞ்சமின் வில்வெர்த் மோதினர். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய பெர்னெட், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜூனியர் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை வகானா ஸோனோபே – அமெரிக்காவின் கிறிஸ்டினா பெனிகோவா மோதினர். அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்திய வகானா, 6-0, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

குவாட் வீல்சேர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து வீரர் சாம் ஸ்ரோடர்- சக நாட்டு வீரர் நீல்ஸ் விங்க் உடன் மோதினார். இருவரும் சமபலத்துடன் ஆடியபோதும், 7-6, 7-5 என்ற நேர் செட்களில் வென்ற ஸ்ரோடர் சாம்பியன் ஆனார். மகளிர் வீல்சேர் ஒற்றையர் இறுதியில் ஜப்பான் வீராங்கனை யுய் காமிஜி-நெதர்லாந்து வீராங்கனை அனீக் வான் கூட் களமிறங்கினர். இப்போட்டியில் சாமர்த்தியமாக ஆடிய காமிஜி, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் ஆனார். ஆடவர் வீல்சேர் ஒற்றையர் இறுதியில் ஜப்பான் வீரர் டொகிடோ ஒடா- கிரேட் பிரிட்டன் வீரர் அல்பீ ஹெவிட் போட்டியிட்டனர். இதில், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்ற ஹெவிட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

The post ஜூனியர் பிரிவு இறுதிப்போட்டிகள்: பெர்னெட், வகானா சாம்பியன் appeared first on Dinakaran.

Read Entire Article