சென்னை,
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கன். 'சூசைட் ஸ்குவாட்,' 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' போன்ற படங்களை இயக்கி பிரபலமான இவர் தற்போது 'சூப்பர்மேன்'படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 11-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில், ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து பேசிய ஜேம்ஸ் கன், அப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் புலியுடன் சண்டையிடும் காட்சி தன்னை மிகவும் ஈர்த்ததாகவும், ஒருநாள் அவருடன் பணியாற்றுவேன் என்றும் கூறினார்.
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை வென்றது.