ஜீவா நடித்த பிளாக் திரைப்படத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி

3 months ago 20

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இவர் தற்போது 'மாநகரம், டாணாக்காரன்' போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள புதிய படத்தில் நடித்துள்ளார்.

அறிமுக இயக்குனர் கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜீவா கதாநாயகனாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு 'பிளாக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், விவேக் பிரசன்னா, யோக் ஜபீ, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல திகிலூட்டும் காட்சிகள் இந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளது.

பிளாக் திரைப்படம் கடந்த 11ம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. பிளாக் படத்தின் 'மஜிலி' என்ற பாடல் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் திரைப்படத்தை பார்த்த நடிகர் கார்த்தி படக்குழுவை பாராட்டி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " வாழ்த்துக்கள் ஜீவா. பிளாக் திரைப்படம் முழுவதுமாகவே பார்ப்பவர்களை திரில்லிங்கான அனுபவத்தை அடிக்கடி கொடுத்த வண்ணம் இருந்தது. மொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். ஒரு பெரிய அறிவுசார்ந்த விஷயத்தை மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் அமைத்ததற்கு பாராட்டுகள்" என பதிவிட்டுள்ளார்.

Congratulations bro @JiivaOfficial. #Black had enough moments to keep a full house audience screaming every now and then out of thrill and excitement. Kudos to the team for simplifying a high concept and making everyone stay with the characters. Sound n edit @priya_Bshankarpic.twitter.com/hLnWGN9v6J

— Karthi (@Karthi_Offl) October 18, 2024

'டிமான்ட்டி காலனி 2' திரைப்படத்திற்கு பிறகு பிரியா பவானி சங்கருக்கு மேலும் ஒரு வெற்றி திரைப்படமாக இது அமைந்துள்ளது.

Read Entire Article