ஜிஎஸ்டி விகிதம் விரைவில் மாற்றி அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

3 hours ago 1

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிகிதம் விரைவில் மாற்றி அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தற்போது நாடு முழுவதும் 5,12,18 மற்றும் 28 சதவீதம் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டதால் இதுபற்றி மறுஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் விரைவில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுபற்றி ஆலோசனை நடத்தி வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ ஜிஎஸ்டியை மாற்றி அமைப்பது குறித்த மறுஆய்வுப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் வரி விகிதங்களைக் குறைப்பது குறித்து முடிவெடுக்கும். சாமானிய மக்கள் பயன்படுத்தும் அன்றாடப் பொருட்களுடன் தொடர்புடைய விலைகள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் முடிவெடுக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

The post ஜிஎஸ்டி விகிதம் விரைவில் மாற்றி அமைக்கப்படும்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article