
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் கிரிபுரா கிராமத்தில் நேற்று இரவு 11 மணியளவில் சிஆர்பிஎப் பாதுகாப்புப்படையினர் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், பிரபோ சிங் என்ற அதிகாரியும் ஈடுபட்டார். வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது பிரபோ சிங் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு அதிகாரியான மண்டல் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.