ஜாமீன் மனுக்கள் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை செய்தது தவறு தான்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல், நீதிபதிகள் கடும் அதிருப்தி

3 hours ago 2

புதுடெல்லி: சட்ட விரோத பணப்பரிமாற்றம் வழக்கில் கைதானவர்கள் தொடர்பான ஜாமீன் மனுக்களானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜால் பூயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, ‘‘அமலாக்க இயக்குநரகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் பிரமாணப் பத்திரத்தில் சிக்கல் இருப்பதாகக் கருதுகிறேன். இந்த பிரமாணப் பத்திரம் முழுமையாக இல்லை.

முறையான விசாரணை இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது அமலாக்கத்துறை மூலம் அரசு வழக்கறிஞர்களாகிய எங்களிடம் கலந்தாலோசிக்காமல், நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்பே பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்துள்ளனர் இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணை நடத்த அமலாக்கத்துறை இயக்குநரிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று கூறினார். அப்போது குறுகிட்ட நீதிபதிகள், \”இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலின் இந்த வாதம் எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தனர் அப்போது மீண்டும் குறுக்கிட்ட ராஜூ,\\”தயவுசெய்து செவ்வாய்க்கிழமை வரை எவ்வித உத்தரவுகளும் பிறப்பிக்க வேண்டாம்.

அமலாக்கத்துறையின் பிரமாணப் பத்திரத்தை ஆராய்ந்து படிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியை இன்று (நேற்று)நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அமலாக்கத்துறை இயக்குநரிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டுள்ளேன். இத்துறையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்க கூடாது. இது துரதிஷ்டவசமானது என்றார். இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், \”அரசு வழக்கறிஞர்களின் அறிவுறுத்தல்கள் இல்லாமல் எப்படி அமலாக்கத்துறை அதிகாரிகளால் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய முடியும் என்று கேள்வியெழுப்பினர்.

அப்போது அறிவுறுத்தல்கள் இல்லாமல் இல்லை. பிரமாண பத்திரம் சரிபார்ப்பு இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தரப்பில் ஏதோ தவறு இருக்கிறது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ கூறினார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், \”எதிர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த அமலாக்கத்துறை அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதன் பின்னரே பிரமாண பத்திரத்தை பரிசீலிக்க முடியும். இது மிகவும் தீவிரமான பிரச்னையாகும்.

குறிப்பாக இங்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் முதலாவதாக தாக்கல் செய்துள்ள கூடுதல் பதில் மனுவை மாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது. மேலும் தற்போது நீங்கள் வைத்துள்ள வாதங்களையும் ஏற்க முடியாது. ஏனெனில் இது எங்களுக்கு கவலை மற்றும் அதிருப்தி அளிக்கும் விதமாக உள்ளது என்று காட்டமாக கூறினர். அப்போது ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி,\\”இந்த விவகாரத்தில் துறை ரீதியான விசாரணை நடத்துவதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

The post ஜாமீன் மனுக்கள் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை செய்தது தவறு தான்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு ஒப்புதல், நீதிபதிகள் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.

Read Entire Article