"ஜாத்" படத்தின் "ராமா ஸ்ரீராமா " பாடல் வெளியீடு

1 day ago 3

மும்பை,

பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி. இவர் பாலிவுட் நடிகர் சன்னி தியோலை வைத்து 'ஜாத்' படத்தை இயக்கி உள்ளார். கோபிசந்த் பாலிவுட்டில் இயக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர் , ஜெகபதி பாபு , ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா பேக்டரி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெரின், ஜெகபதி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட 'ஜாத்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் 2வது பாடல் ராம நவமியை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 'ராமா ஸ்ரீராமா' என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

जग में गूंजेगा एक ही नाम जय श्री राम #JAAT second single #OhRamaShriRama out now on the occasion of Sri Ram Navami ❤▶️ https://t.co/scVoJZIL3RGRAND RELEASE WORLDWIDE ON APRIL 10th.#BaisakhiWithJaat Starring Action Superstar @iamsunnydeolDirected by… pic.twitter.com/kEWsTNVM2b

— Mythri Movie Makers (@MythriOfficial) April 6, 2025
Read Entire Article