ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

3 months ago 8

 

விருதுநகர், பிப்.15: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் வாஞ்சிநாதன், பாண்டித்துரை, கண்ணன் உள்ளிட்டோர் தலைமையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் சிறப்புரையுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலியாக உள்ள 30 சத காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

The post ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article