'ஜவான்' படத்தில் நடிக்க மறுத்த மலையாள நடிகர் ... காரணம் என்ன தெரியுமா?

3 hours ago 2

சென்னை,

மலையாளத்தில் `ஆர் டி எக்ஸ்' `ஒரு வடக்கன் செல்பி' போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நீரஜ் மாதவ். தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் அவரது நண்பராக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் அடி எடுத்து வைத்தார்.

`தி பேமிலி மேன்' வெப் சீரிஸிலும் இவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ இயக்கத்தில் வெளியான `ஜவான்' திரைப்படத்தில் நடிக்க மறுத்தாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"ஜவான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம்போல எனக்கு தெரியவில்லை. அதே சமயம் , அப்போது எனக்கு மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கான ஆர்வம் கொஞ்சம் கூட இல்லை. அதனால் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன். இதற்காக பலரும் என்னை திட்டினார்கள். ஆனால் நான் பெரிதாக எதையும் இழந்ததாக நினைக்கவில்லை" என்றார்.

Read Entire Article