உலகின் நம்பர் 1 மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் அவர்தான் - இந்திய வீரர் பாராட்டு

4 hours ago 3

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் தற்சமயம் அணியில் மீண்டும் இடம் கிடைக்க போராடி வருகிறார். தோனி மற்றும் விராட் கோலி இந்திய அணியின் கேப்டன்களாக இருந்த கால கட்டங்களில் குல்தீப் யாதவுடன் இவரும் அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். இருப்பினும் மோசமான பார்ம் மற்றும் இளம் வீரர்களின் வருகையால் அணியில் இடம் கிடைக்காமல் போனது.

தற்போது எதிர்வரும் ஐ.பி.எல். தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் உலகின் தற்போதைய நம்பர் 1 மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், "தற்போதைய உலகின் நம்பர் 1 மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்தான். அவருடன் நான் பல்வேறு போட்டிகளில் இணைந்து விளையாடி உள்ளேன். சர்வதேச போட்டிகளானாலும் சரி, உள்ளூர் போட்டிகளாக இருந்தாலும் சரி அவருடைய பந்துவீச்சு என்பது மிகச்சிறப்பான ஒன்று. அவருடன் இணைந்து எப்போதுமே பந்து வீசுவது என்பது எனக்கு பிடிக்கும். ஏனெனில் நாங்கள் இருவருமே ஒரே பாணியில் பந்து வீசக்கூடியவர்கள். களத்திற்கு உள்ளேவும், களத்திற்கு வெளியேவும் அவருடன் நல்ல நட்பு இருக்கிறது" என்று பாராட்டியுள்ளார்.

Read Entire Article