ஜல்லிக்கட்டு மேடையில் இருந்து கலெக்டரை அகற்றுவதா? அண்ணாமலை கண்டனம்

3 hours ago 2

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் பதிவில் கூறியிருப்பதாவது:-

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவை மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

துணை முதல்-அமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட கலெக்டரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான தி.மு.க.வின் 2006 - 2011-ம் ஆண்டு ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே, இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்? துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, 2011-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளும், அதற்குப் பிறகு வந்த 10 ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வருகிற 2026-ம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article