சென்னை: ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு முறையாக நிதி விடுவிக்கப்படவில்லை என ரவிக்குமார் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். “2024ல் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்க திட்டமிட்ட ஒன்றிய அரசு அதை நிறைவேற்றவில்லை. ஜல் ஜீவன் திட்டத்துக்கு 2024-25ல் ரூ.70,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் ரூ.22,000 கோடி மட்டுமே. எஞ்சிய தொகை செலவிடப்படாததால் மாநிலங்களுக்கு மிகப்பெரிய நிதிச் சுமை ஏற்படுகிறது. ஒன்றிய அரசு நிதியை முறையாக தந்தால் மட்டுமே விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் முறையாக குடிநீர் வழங்க முடியும்” எனவும் ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
The post ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு முறையாக நிதி விடுவிக்கப்படவில்லை: ரவிக்குமார் எம்.பி. குற்றச்சாட்டு appeared first on Dinakaran.