ஜம்முவில் இன்று அதிகாலை பயங்கரம்; ஓய்வுபெற்ற டிஎஸ்பி உட்பட 6 பேர் தீயில் கருகி பலி

4 months ago 15

ஜம்மு: ஜம்முவில் இன்று அதிகாலை நடந்த தீவிபத்தில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி உட்பட 6 பேர் தீயில் கருகி பலியான நிலையில் மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு – காஷ்மீரின் கத்துவா பகுதியில் ஓய்வுபெற்ற போலீஸ் டிஎஸ்பி அவதார் கிரிஷன் ரெய்னா (81) மற்றும் அவரது குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் அவரது வீட்டில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. அதிகாலை நேரம் என்பதால், உடனடியாக மீட்புப் பணிகள் நடைபெறவில்லை.

வீட்டிற்குள்ளேயே குடும்பத்தினர் தூக்கக் கலக்கத்தில் சிக்கிக் கொண்டதால், அனைவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி அவதார் கிரிஷன் ரெய்னா, அவரது மகள் பர்கா ரெய்னா (25), பேரன் தகாஷ் (3), உறவினர்கள் கங்கா பகத் (17), டேனிஷ் பகத் (15), அத்விக் (6) ஆகிய 6 பேரும் மூச்சுத் திணறலில் சிக்கி பலியாகினர். தகவலறிந்த மீட்புப் பணியினர் பல மணி நேரம் போராடி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுவர்ணா (அவதார் கிரிஷன் ரெய்னாவின் மனைவி), நீது தேவி (40), அருண் குமார் (15) ஆகியோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் சுரீந்தர் அத்ரி கூறுகையில், ‘பத்து பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஜம்முவில் இன்று அதிகாலை பயங்கரம்; ஓய்வுபெற்ற டிஎஸ்பி உட்பட 6 பேர் தீயில் கருகி பலி appeared first on Dinakaran.

Read Entire Article