சென்னை: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, போலீசார் தடுத்ததால் சுவர் ஏறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; உமர் அப்துல்லாவுக்கு நடந்தது, மக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஜனநாயகத்தில் நம்பிக்கை உடைய அனைவரும் ஒருமித்த குரலில் இதனை கண்டிக்க வேண்டும்.
The post ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.