ஜம்மு-காஷ்மீர்: சிறையில் இருந்த குற்றவாளி கடுமையான வயிற்று வலியால் பலி

2 hours ago 1

ஸ்ரீநகர்,

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் சுரேஷ் (20). இவர் தற்போது ஜம்மு காஷ்மீரில் உள்ள திரிகுடா நகரில் வசித்து வந்தார். சுமார் ஒரு வாரத்திற்கு முன் திருட்டு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிறையில் இருந்த சுரேஷ் கடுமையான மார்பு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் சுரேஷ் உடனடியாக ஜம்மு மாவட்ட காவல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் அங்கு மாலை 4 மணியளவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது அவரது குடும்பத்தினரும் அங்கு இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரவு 9.30 மணியளவில் கடுமையான வயிற்று வலியால் சுரேஷ் உயிரிழந்தார்.

பின்னர் உடலானது பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article