
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள சபர்வான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் இணைந்து இன்று அதிகாலை தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
அப்போது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை வெடித்தது. தற்போதுவரை மோதல் தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்த விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று பராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்போர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.