ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளாக தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்.. எப்போது முடிவுக்கு வரும்!

2 hours ago 2

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தீவிரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் அங்கு நடந்த தாக்குதல் குறித்து சுருக்கமாக பார்க்கலாம். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல் நடைபெறுவது இது முதன்முறை கிடையாது. ஆன்மீக யாத்திரை மற்றும் சுற்றுலா செல்லும் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகவே உள்ளது.

*1993 . 15 அமர்நாத் பக்தர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.

*1995 ஜூலை 4 தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டனர். நார்வே நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், எஞ்சிய 5 பேரும் என்ன ஆனார்கள் என இதுவரை தெரியவில்லை.

*1998 ஜூலை 28 அமர்நாத் பக்தர்கள் 20 பேர் தாக்குதலில் மரணம் அடைந்தனர்.

*2000 மார்ச் 21 சீக்கிய சமூகத்தினர் 36 பேர் கொலை செய்யப்பட்டனர்.

*2000 ஆக. 2 அமர்நாத் பக்தர்கள் 21 பேர் உள்ளிட்ட 32 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

*2001 ஜூலை 20 ஷேஷ்நாக் கையெறி குண்டு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

*2001 அக். 1 ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற வளாகத்தில் தற்கொலைப்படை தாக்குதல், 36 பேர் உயிரிழந்தனர்.

*2002 மார்ச் 30 ரகுநாத் கோயில் தாக்குதலில் 7 பேர் மரணம் அடைந்தனர்.

*2002 ஏப்ரல் 6 அமர்நாத் யாத்ரீகர்கள் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

*2002 நவம்பர் 23 ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 19 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

*2002 நவம்பர் 24 தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

*2003 மார்ச் 23 புல்வாமா மாவட்டத்தில் 11 பெண்கள் 2 குழந்தைகள் 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

*2003 ஜூலை 22 இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் மரணமடைந்தனர்.

*2005 ஜூன் 13 புல்வாமா அரசு பள்ளி முன் கார் வெடிகுண்டு தாக்குதல், 18 பேர் உயிரிழந்தனர்.

*2017 ஜூலை 10 அனந்த்நாக் தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

*2022 மே 13 ஜம்மு சென்று கொண்டிருந்த பேருந்து மீதான தாக்குதலில் 4 பேர் மரணம் அடைந்தனர்.

*2024 ஜூலை 9 ரேஸி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனிடையே பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களில் பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணம் அடையும் நிலை தொடர்கிறது. இதன் உச்சமாக 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

The post ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளாக தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்.. எப்போது முடிவுக்கு வரும்! appeared first on Dinakaran.

Read Entire Article