சென்னை: தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), அகமதாபாத் EDII உடன் இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பினை [CPEI] நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த கல்வி பயின்று வருகின்றனர். பாடத்திட்டம் மேம்பாடு மற்றும் நிபுணர்களின் பயிற்சி மூலம் தொழில்முனைவோரை வளர்ப்பதில் EDII அகமதாபாத், தனது பரந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த ஆண்டும் சான்றிதழ் படிப்பு ஜூன் 2025 முதல் தொடங்கவுள்ளது., இதற்கான விண்ணப்பங்கள் (ஆன்லைன் முறையில்) வரவேற்கப்படுகின்றன.
https://www.editn.in/Web-One-Year-Registration
தொழில்முனைவோராக ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.80,000/- கட்டணமாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ITI-யில் தொழிற்கல்வி பயிற்சி முடித்தவர்கள் சேரத் தகுதியுடையவர்கள். இது தொழில்முனைவோர் குறித்த கல்வித்திட்டமாகும், எனவே தொழில்முனைவோராக முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். புதுப்பித்த பாடத்திட்டம், நவீன வசதிகளுடன் கூடிய நூலகங்கள், அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள், SMART வகுப்பறைகள், கள அனுபவம், பொது போக்குவரத்தை அணுகக்கூடியது, குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், வணிக வளர் காப்பகங்கள் (Business Incubator) ஆகியவை இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்.
CPEI படிப்பின் சிறப்பம்சங்கள்:
-
- CPEl படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 9 வளர் காப்பகங்களுக்கு இலவச அணுகல் கிடைக்கும்.
- மாணவர்கள் பல்வேறு மாநில அரசு நிறுவனங்களுக்கும் சென்று, தொழில்முனைவோருக்குத் தேவையான அத்தியாவசிய வணிகத் திறன்கள் மற்றும் அறிவை வளர்த்து கொள்ளலாம்.
- தயாரிப்பு யோசனையிலிருந்து தயாரிப்பு வணிகமயமாக்கலுக்கு அழைத்துச் செல்வதற்கான IVP வவுச்சர் A மற்றும் B திட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவி செய்யப்படும்.
- மாணவர்கள் TANSeed நிதிக்கு விண்ணப்பிக்கவும் வசதி செய்யப்படும்
- மேலும், மாணவர்கள் விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்க திறன்கள் வளர்த்து கொள்ளலாம்
- தொழில்முனைவோர் குறித்த அறிவைப் புதுப்பிக்கும் பொருட்டு EDII-அகமதாபாத், அண்ணா பல்கலைக்கழகம்-CED, IITM, Crescent Innovation Incubation Council, Forge Incubation Centre, Golden Jubilee Biotech Park for Women Society போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கான மாணவர்களின் வணிக அனுபவ பயணங்கள் (Campus Immersion) திட்டம், மேற்கொள்ளபடுகிறது.
- முழுமையான கல்வியைப் பெறவும் அவர்களைச் சித்தப்படுத்துவதற்காகவும், CPEI படிப்பின் போது Startup-TN போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு கள அனுபவங்கள் ஏற்பாடு செய்ய படுகின்றன.
கல்வி கட்டணத்திற்காக தேவைப்படும் மாணக்கருக்கு கட்டணத்திற்கான வங்கிக் கடன் வசதிகளும் செய்து தரப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.editn.in ஐப் பார்வையிடவும் அல்லது 8668101638 / 8668107552 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
The post தொழில் முனைவோராக வேண்டுமா..? இந்த அரிய வாய்ப்பினை தவற விடாதீர்கள் appeared first on Dinakaran.