ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

1 month ago 17

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுஷு தீவில் இன்று மாலை 7.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 14 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட அப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்குமுன் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்து 886 பேர் உயிரிழந்தனர். அதேபோல், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article